PUBLICATIONS
தமிழர்
வாழ்வில் இசையும் ஆலயமும்
முனைவர்
மா.மணிகண்டன்,
உலகில்
தோன்றிய அனைத்து மனித இனங்களும் தத்தமக்குரிய வழிபாட்டு மரபுகள், ஆலயங்கள் ஆகியவற்றினைக்
கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆலய வழிபாடு, விழாக்கள், இன்ப துன்ப நிகழ்வுகளில் இசைக்கு
இன்றியமையாத இடம் கொடுத்துள்ளனர். குறிப்பாக வழிபாட்டில் இசைக்கு இருக்கும் இடத்தினை
வேறு எதனைக் கொண்டும் நிரப்ப இயலாது.
தமிழரும்
ஆலயமும்
வேதமந்திரங்கள்
ஒருவித ஒலி அலைகளை ஏற்படுத்துகின்றன, மேலும் அவற்றினை சுருதி என அழைக்கப்படுவதன் காரணமும்
அதுதான். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்ற தமிழ்ப் பழமொழி சமயத்தின் பால் பழந்தமிழன்
வைத்திருந்த சமயப் பற்றால் மட்டுமன்று ஆலயத்தினைச் சுற்றியே அன்றையத் தமிழர்களின் வாழ்வு
அமைந்திருந்தது என்பதனைக் காட்டுகின்றது. ஆலயங்கள் கற்றறிந்த சான்றோருக்கு ஓர் அறிவு
மேடையாகவும், சிற்பிகளுக்கு சிற்பக் கலைக்கூடங்களாகவும், ஓவியர்களுக்கு அவர்களின் கற்பனைப்
பிரதிபலிப்புக் கூடங்களாகவும், இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களுக்கு ஒரு முக்கியச்
சான்றின் இடமாகவும் அமைந்தன. கடவுள் வழிபாட்டின் போது இசையையும், கூத்தமையும் சேர்த்து
ஆண்டவன் அவையில் சமர்ப்பித்தல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் மரபாகும்.
“குன்றகச் சிறுகுடி கிணையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர” (திருமுருகு.196-197)
சிறு
ஊரிலே இருக்கின்ற சுற்றத்தாருடன் கூடி தொண்டகம் எனும் சிறிய பறை இசைக்கருவியை இசைத்து
குமரக்கடவுளுக்கு முன் குரவைக்கூத்து ஆடினர் என்று இப்பாடல் கூறுவதன் மூலம் இசையும்
வழிபாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகின்றது.
முற்காலங்களில்
வழிபாட்டின்போது “அதிகாலைக் காந்தாரப்பண்ணையும், பின்னர் சடாவம் என்ற பண்ணையும், உச்சிக்காலத்தில்
நட்டராகம் என்ற பண்ணையும் பின்னர் கௌசிகத்தையும், மானிச்சந்தியில் சைந்தவம் என்னும்
பண்ணையும் பாடியதாக ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ராகங்கள் ஒவ்வொரு ஆலயத்திற்கும் பிற்காலத்தில்
மாறுபட்டு வந்தது போல் வாத்தியங்களும் மாறுபட்டு வந்தன.”1 வீணை வாசிக்கும் கலைமகள்,
குழல் ஊதும் கண்ணன், உடுக்கை ஏந்திய சிவன், மிருதங்கம் வாசிக்கும் நந்திகேசர், தம்புரா
ஏந்திய நாதமுனி போன்ற கடவுளர்களையே இசை மீட்டச் செய்து கடவுளே ஏழிசையும், இசைப்பயனும்,
இன்னமுதமாய் வணங்கிய தமிழர்கள் இசைத் தொண்டு செய்ய ஆலயங்களில் பாடவியர் (நடன ஆசான்),
காந்தர்வன் (பாடகர்), காந்தர்கி (பாடகி) மற்றும் உடுக்கை வாசிப்பவன், வீணை வாசிப்பவன்,
முத்திரைச் சங்கு ஊதுபவன், கொட்டு மத்தளம் வாசிப்பவன், சகடைகொட்டி போன்ற கலைஞர்களைக்
கடவுளுக்கு தொண்டு செய்ய நிறுவினார்கள்.
ஆலயமும்
இசையும்
வேதநெறியானது
தழைத்தோங்க, சைவத்துறை விளங்க இறையருளால் திருஞானசம்பந்தர் அவதரித்தார் என்பதை சேக்கிழார்ப்பெருமான்
கூறியருளியது பலரும் அறிந்த ஒன்று. முடியுடை மூவேந்தர்களுள் சோழ மன்னர்கள் தாம் பரந்த
மணப்பான்மைக்கு ஏற்ப பெரிய திருக்கோயில்களைக் கட்டினர். இன்னும் சொல்லப் போனால் அரண்மனைகூட
இல்லாமல் ஆட்சி செலுத்தி கோயில்களையே மிகப்; பெரியனவாகக் கட்டிய பெருமை அவர்களையே சாரும்.
மேலும் பூசை முறைகளையும், திருவிழாக்களையும் ஆகம முறைப்படி நிகழ்த்துவதற்கு ஏற்ப வழி
வகைகளைக் கண்டனர்.
ஆலயங்களில்
தமிழ்ப் பாசுரங்கள் ஒரு பக்கமும் வேதகானம் மறுபக்கமும் பிழையின்றி பாடப்பெறல் வேண்டும்
என்பதே அக்கால ஆட்சியாளர்களின் விருப்பம். “குலோத்துங்கச்சோழன், அம்பலத்து ஆடுவான்
பட்டன், திருவரங்கமுடையான் பட்டன், முதலிய 500 தமிழ்ப் பட்டர்களை அவர்கள் குடும்பத்தோடு
வேதானம் சொல்லிக் கொடுக்கவும் ரூபவதாரம் என்ற சமஸ்கிருத இலக்கணம் போதிக்கவும் வேங்கி
நாட்டுக்கு அனுப்பி வைத்தான் என்று செப்பேடு (குலோத்துங்கனால் வரையப்பட்டது) கூறுகிறது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி, தவத்திரு சங்கராச்சாரியர் சுவாமிகளின் சொற்பொழிவுகளைத் திரட்டி
ஜகத்குருவின் உபதேசங்கள் என்ற பெயருடன் வெளியிட்ட நூல் (பக்.183-187) இவ்விவரங்களைக்
காணலாம்.”2 மேலும் நாடாளும் வேந்தர்களின் இசைப்பற்றினை அறியும் சான்றாக இச்செய்தி உள்ளது.
ஆலய
இசைமுறைகள்
ஆலயங்களில்
வழிபாட்டு வேளைகளில் பெரும்பாலும் நாகசுரம், தவில் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப் பெருகின்றன.
மேலும் முரசு ஒலிக்கப்பெறுகிறது. ஆனால் அது இன்று மின்சார முரசாக ஒலிக்கின்றது.
ஆலய
வழிபாட்டு வேளைகளில் வாசிக்கப்பெறும் இசையைக் கேட்டு கடிகார உதவியன்றி நேரத்தை மக்கள்
அறிந்து கொண்டனர். இதனை விரித்திடும் வகையில் “காலை 4 மணி சுமாருக்கு பூபாளம், பௌலி,
மலயமாருதம். காலை
6
மணிக்கு பிலகரி, கேதாரம், உச்சி வேளையில் முகாரி, பூரணசந்திரிகா, மாலை 2 மணிக்கு காம்போதி,
தோடி. இரவு 10 மணிக்குமேல் ஆனந்தபைரவி, நீலாம்பரி, நடுநிசியில் பேகடை, சாமா. இரவு
2 மணிக்குமேல் 4 மணிவரை மோகனம், இந்தோளம் போன்ற ராகங்களை முறைப்படி வாசிப்பது வழக்கம்.”3
ஆண்டவன் புறப்பாட்டுக்குமுன் தவில் கண்டநடையில் அலாரிப்பு வின்யாசம் நடைபெறும்.
சாமி
தூக்கும் பணியாளர்கள் அலாரிப்பு கேட்டதும் பல திக்குகளில் இருந்து
வந்து
தயாராக நிற்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து நாகசுரத்தில்
நாட்டையாக
ஆலாபனை கேட்டதும் பக்கதர்கள் சாமி புறப்பாட்டு தரிசனத்திற்குக் கூடுவார்கள்.
கிராம
தெய்வக் கோயில்களில் இசை
கிராம
தெய்வக் கோயில்களைப் பொறுத்தவரையில் வழிபாட்டில் ஒவ்வொரு நிலையிலும் இசை இன்றியமையாத
ஒன்றாக இருக்கும். குறிப்பாக அம்மன் கோயில்களுக்கு மது, முளைப்பாரி, பால் சுமக்கும்
பக்தர்கள் விழா நாளுக்கு பல நாட்கள் முன்னதாக விரதம் இருப்பர். இந்தக் காலகட்டங்களில்
குலவையுடன் கும்மியடித்தல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுதல் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றனர்.
இசையும், இறைவனும் ஒன்று என்பதை வாழ்வியல் நெறியாகக் கொண்டுள்ளனர். தீமிதித்திருவிழா,
அலகுகுத்துதல் போன்ற சடங்குகளிலும் இசைக்கு இன்றியமையாத இடமுண்டு.
பாணர்களும்
வழிபாட்டிசையும்
இசைக்காகத்
தம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கிக் காலமெல்லாம் இசையை வளர்த்தப் பெருமைக்குரியவர்கள்
பாணர்கள். இவர்கள் சிலவேளைகளில் போதிய வாழ்வியல் வசதிகள் பெறாத காரணத்தால் மீன்பிடித்தல்,
காதலர்களுகு;குத் தூதுபோதல் முதலிய தொழில்களில் ஈடுபட்டுக் குலத்தொழிலை இழந்தனர். எனினும்
திருநீலகண்டயாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார், பாணபத்திரர் போன்ற இசையறிஞர்கள் இசையுடன்
இறையனுபவம் பெற்றனர்.
ஆழ்வார்
நாயன்மார் வழிபாட்டிசை
தெய்வநல
இசை மூலமாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் பல வியக்கத்தக்க சாதனைகளைச் செய்துள்ளனர்.
சம்பந்தரின் இசை எலும்பைப் பெண் (பூம்பாவ) ஆக்கியதும், அப்பூதியடிகளின் இசை இறந்த பாலகனை
உயிர்ப்பித்ததும் தமிழர்களின் நெஞ்சத்தில் இன்னும் நீங்காமல் உள்ளன.
சைவத்தின்
நாயகன் சிவபெருமான் இசைபித்தன் என்று காவியங்கள் உணர்த்துகின்றன. இசை கேட்டு மயங்கி
இராவணனுக்கு வரம் அளித்தவன் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. சைவ சமய நாயன்மார்களில்
முக்கியமானவர்களாய் குறிப்பிடப்படும் நால்வர் இசை வழியாக இறைவனைக் கண்டார்கள். இவர்களின்
பதிகங்கள் இன்றளவும் சிவாலயங்களில் வேதத்திற்கு ஒப்பாக மதித்து ஓதப்பெறுகின்றன.
இசைத்தூண்கள்
தமிழர்
வரலாற்றில் இசைத்தூண்கள் என்பவை அறிய கண்டு பிடிப்புகளாகும். பாறைகளிலிருந்து ஒலி எழுப்பும்
அற்புதத்தினைக் கண்ட மன்னர்கள் காலம் காலமாக இசைக்கலையைப் போற்றிக் காக்கும் பொருட்டு
கோயில்களில் இறைவன் சன்னதியில் இசைத்தூண்களை அமைத்தனர். இத்தூண்களில் சிலவற்றில் ஏழிசைசுரங்களும்,
சிலவற்றில் இசைக்கருவிகளின் ஒலியும் கேட்கின்றன. தாராசுரம், ஆழ்வார்திருநகரி சண்பகராமநல்லூர்,
நெல்லையப்பர் கோயில்களிலும், இன்னும்பிற கோயில்களிலும் இத்தூண்கள் காணப்படுகின்றன.
கல்லில் கலைவண்ணம் கண்ட தமிழர்களின் இசைக் கருவிகளின் வரலாற்றை எடுத்துரைப்பது ஆலயச்
சிற்கங்களே ஆகும். இசைக் கருவிகள், அவற்றை வாசிப்போர் போன்றவர்களையும் சிலைகளாக செதுக்கியும்,
சிற்பங்களாக வடித்தும் உள்ளனர்.
ஆலய
இசைக்கு அரசின் நல்கை
அரசர்கள்
காலத்தில் நிலமும் இடமும் கொடுத்து ஆதரிக்கப்பட்ட ஆலய இசைக்கலைக்கு இன்றளவும் சில ஊர்களில்
விவசாயத்திற்குரிய நிலமும், குடியிருப்பதற்கான வீடும் தற்பொழுது வழங்கப்பெற்று வருகிறது.
ஊதியமுறைக் கலைஞர்களாகப் பலரும் உள்ளனர். ஆலயங்களில் நாகசுர தவில் கலைஞர்கள், சின்ன
மேளம் என்றழைக்கப்படும், நட்டுவதாளக் கலைஞர்கள், தேவார ஓதுவார்கள், திருச்சின்னம் இருப்பவர்கள்
போன்ற கலைஞர்கள் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் உள்ள ஆலயங்களில்
நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர்.
சான்றென்
விளக்கம்
1. இரா.ஜெகதீசன், தமிழிசை ஆய்வுமாலை கட்டுரை,
ப.107
2. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பொன்விழா
மலர், 1970, ப.22
3. சே.வைத்தியலிங்கன், தமிழர் பண்பாட்டு வரலாறு,
ப.112
தமிழிசையும் உலக இசையும்
முனைவர் மா.மணிகண்டன்
ஓர் இனக்குழு மொழி இல்லாமல் கூட இருக்கமுடியும். ஆனால் இசை இல்லாமல் இருப்பதற்கான காரணியைக் கூற முடியாது. இசை என்பதற்கு இசையியலாளர்கள் (ஆரளiஉழடழபளைவள) சொல்லும் விளக்கங்கள் பல இருப்பினும் சமூகவியலாளர்கள் இசையை ஒரு பண்பாட்டுக் கூற்றின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள். உணர்வுகளை வழிநடுத்தும் இசைக்கு மொழி தேவையில்லை என்ற கருத்து இருக்கிறது. இது உண்மையானாலும் உள்ளத்தை நெறிப்படுத்தும் இசைக்கு மொழி இன்றியமையாக் காரணமாகும். தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடுகளுள் ஒன்றாகத் திகழும் செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற இருகூறுகளையுடைய தமிழருடைய இசை மரபில் பிரதேசத்தவர் வருகை, பிறநாட்டவர் வருகையால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றங்களால் உலக இசை என்ற ஒரு புதுமை உண்டாயிற்று. மேலும் உலக இசை என்பது ஊடகத்துறைகளுள் ஒன்றான திரையிசையின் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.
உலக இசை
உலக இசை என்பது மேற்கிந்திய இசையல்லாத இசையைக் குறிப்பதாக அமைகிறது. குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டார் இசை (குழடமடழசந) இனக்குழு இசை (நுவாniஉ) ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளின் மண்ணின் இசையாகவும் கொள்ளப்பெறுகிறது. மேலும் நாட்டுப்புற இனக்குழு இசையோடு மேற்கிந்திய வெகுசன இசை வடிவங்கள் கலந்து ஒரு தனி இசை வடிவமாக அறியப்பெற்று வருகிறது.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அறிவியல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியின் காரணமாக ஒளிப்பதிவுத் துறை (சுநஉழசனiபெ வுநஉhழெபழடல) விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்புத்துறை ஆகியவற்றின் பயனாய் உலகக் கலைஞர்கள் இடையிலான தொடர்பும் கலந்துரையாடலும் ஏற்பட்டன. இதன் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கருத்துக்கள் செய்திகள் போன்றவை எளிதாக பரவின. மேலும் கலைஞர்கள் தங்களது கலை அனுபவத்தினை நாடுவிட்டு நாடு சென்று நிகழ்த்திக்காட்டிப் பெருமை பெற்றனர். புதிய இசை வடிவங்களுடன் சேர்க்கைகளும் சோதனை முயற்சிகளும், புதிய கலந்திசை வடிவங்களுக்கு வழிவகுத்தன. இவ்வகையில் 1980-களில் மேற்கிந்திய இசை உலகில் புதிய வகையிலான இசை வகைகள் தோன்றின. உலகில் தோன்றிய புதிய வகையான இசை வகைகள் “றுழசடன அரளiஉஇ றுழசடன டிநயவஇ றுழசடன கரளழைn என்பனவே. அவை வேறு சில பகுதிகளில் நவாழெ pழிஇ யுகசழ pழிஇ pழிஇ ககசழ டிநயவஇ எனவும், இதே இரு வகைகள் வேறு சில இடங்களில் வசiடியடஇ வநஉhழெ-வசiடியடஇ உலடிநச வசiடியடஇ வசயnஉநஇ நெற யபநஇ றழசடன யஅடிநைவெஇ நவாழெ கரளழைnஇ நவாழழெ வநஉhழெஇ நவாழெ – pரமெஇ நவாழெ வசiடியட” (காட்சிப்பிழை திரை ப-1) என்றும் வழங்கப்பெற்றன. 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்க இசைச் சந்தை பற்றி நியூஸ் வீக் இதழின் கட்டுரைப் பதிவொன்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையாக மேற்கிந்திய செவ்வியல் இசை குறிக்கப் பெற்றுள்ளது. 1980-களில் உலக இசைச் சந்தையில் நுழைந்த இவ்வகை இசை 1990-களின் ஆரம்பத்தில் மேற்கிந்திய செவ்வியல் (ஊடயளளiஉயட) ஜாஸ் (துயணண) இசைக்கு நிகரான விற்பனையை எட்டியுள்ளது. மேற்கிந்திய இசை என்பது ஒரு தனிப்பட்ட இசை வகை அல்ல பல்வேறு இசைக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்றே சொல்ல வேண்டியுள்ளது. மேற்கிந்திய வெகுசன இசையை, செவ்வியல் அல்லாத ஆங்கிலம் பேசாத நாடுகளின் இசைக் குறிப்பதாகவும் சொல்லலாம். இசைச் சந்தையைப் பொறுத்த அளவில் றுழசடன அரளiஉ என்பது நாடார் இசையை இட்டு நிரப்புவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய முழவழ இசை திபெத்திய மந்திரங்கள், பல்கேரியாவின் நாட்டார் இசை மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய தென் அமெரிக்கா நாடுகளின் நாட்டுப்புற பழங்குடியிசை ஆகியவற்றையும் இதில் அடக்கலாம்.
தமிழிசையில் உலக இசை கலத்தல்
கிழக்கிந்திய கம்பெனிகள் வருகையில் ஒரு சில மாற்றங்கள் தோன்றின. அன்றுவரை ஆங்கிலம் அறியாத இந்தியர்கள் ஆங்கில மொழி கற்க நேர்ந்தது. புதுமையை அனைவரும் விரும்பும் விதமாக ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும் நிலையும் அவற்றை வாயில் முணுமுணுக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இதுவே தொடர்ச்சியாகி காலப்போக்கில் 1980-களில் தோன்றிய புதிய இசை வகைகளுக்கு மூல காரணமாக இருந்தது அப்போதிருந்த உலகமயமாக்கல் சூழ்நிலைதான் என்று சொல்ல வேண்டும். 1980-களில் மேற்குச் சூழலில் உருவான இவ்விசையமைப்பு 1990-களில் தமிழ் சினிமா இசைக்குள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
இந்தியப் பண்பாட்டில் கலப்பிசை தோன்றிடினும் மாறாதிருக்கும் ஒரே அம்சம் குரலிசை (ஏழஉயட ளுவலடந) மட்டுமே ஆகும். மேற்கிந்திய நாடுகளின் ஜாஸ், ராக் அன் ரோல், பாப் வகைகளின் தாக்கம் இருப்பினும் தமிழ்த் திரையிசையின் அடிப்படை அடையாளத்தினை முற்றிலுமாகத் தகர்த்துவிடவில்லை. “விஸ்வநாதன் வேலை வேண்டும் (படம்: காதலிக்க நேரமில்லை) எனும் பாடல் 70-களிலும், 80-களில் ரம்பம்பம் ஆரம்பம் (படம்: மைக்கேல் மதன காமராசன்) பாடல்களும் பிரபலமாக விளங்கியவை. இவ்விரு பாடல்களும் இரு வேறு காலகட்டங்களில் இரு வேறு இசை அமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டவை. ஆனால் அவற்றின் அடிப்படை மெட்டு ஏதோவொரு வகையில் தமிழ் அடையாளத்தோடு தொடர்புடையதாக இருந்தன. ஆனால் 90-களுக்குப் பிந்தைய சூழல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பெறப்பட்ட நாட்டார் மற்றும் செவ்விசை துணுக்குள் (ளுயஅpடநள) நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட இயற்கை ஒலிகள், தாளக் கோர்வைகள் ஆகியவை இசையமைப்பாளர்களுக்கு கணினித் தொழில் நுட்பத்தின் உதவியோடு கிடைக்கப்பெற்றன.” (காட்சிப்பிழைத் திரை ப-1) ஆதலால் அவற்றின் தாக்கம் புது வகையான இசையை உருவாக்கியது.
இசையை ஒரு பண்பாட்டுக் கூறாக அடையாளப்படுத்தும் போது ஏறத்தாழ 4,634 சமூகங்கள் இந்தியாவில் இருப்பதாக இந்திய மானிடவியல் அளவை அமைப்பு (யுவொசழடிழைடழபiஉயட ளரசஎநல ழக ஐனெயை) கணக்கிட்டுள்ளது. இந்தியா போன்ற பண்டைத்துவம் கொண்ட பண்பாடுகள் உள்ள பல்வேறு மொழி, இனப் பாகுபாடுகள் கொண்ட மக்கள் கூட்டம் வாழும் ஒரு தேசத்தினை ஒரே விதமான இசையால் ஈர்த்துவிட முடியும் என்பது ஆய்வுக்குரியது. பொதுவாகவே உணவு, உடையைப் போல ஏனைய பண்பாட்டுக் கூறுகளிலும் தனித்துவமான கூறுகள் இருப்பது இயற்கை. ஆனால் புதுமையான ஒன்றினை வியப்புடன் காண்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பது உண்மை. அந்த வகையில் தமிழில் கலப்பிசை தோன்றிவிட்டது.
இளையராசாவால் இசையமைக்கப்பெற்ற கிழக்கு வாசல் திரைப்படத்தின் ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’ என்ற பாடல் கிராமிய இசையை அடியொற்றி அமைக்கப்பெற்றிருக்கிறது. அதில் அடுத்ததாக வரும் (டீ பு ஆ) இடை இசையில் (சரணத்திற்கு முன்பகுதி) தென்னாப்பிரிக்கர்களின் நாட்டுப்புற இசைச் சாயலை அறிமுகம் செய்கிறார் இளையராசா. இன்றைய நவீன உலகில் கிராமப்புறங்களில் கூட திருத்தப்படாத புருவங்களைக் கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அதுபோல வெளிநாட்டு மோகத்தின் காரணமாக தலை கிராப்பும் ஆண்களிடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டு வருகிறது. அதுபோல புதுமையை விரும்பியதன் காரணமாக கலப்பிசை தோன்றியது.
கலப்பிசை
இந்நாளில் இசை உருவாக்கம் என்பது முழுக்க முழுக்க தொழில் நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. இசையமைப்பாளர் என்பவர் மெட்டுப்போடத்தெரிந்த ஒரு படைப்பாளியல்ல. 1980-களோடு அந்த முறை முடிவுக்கு வந்தது. இப்போது இசையமைப்பாளர்கள் என்பவர்கள் எலக்ட்ரானிக் கீ போர்டுகளைக் கணினியோடு இயக்கத் தெரிந்த ஒரு தொழில் நுட்ப வல்லுநராக இருக்க வேண்டும். இதில் ஒலிப்பொறியியல் (ளுழரனெ நுபெiநெநசiபெ) ஒரு இன்றியமையா நுட்பமாக உள்ளது. லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள கீபோர்டுகள் (முநலடிழயசனள) கணினிகளை (ஊழஅpரவநசள) ஒலிபெருக்கிகள் (ஆழnவைழசள), ஒலி வாங்கிகள் (ஆiஉசழிhழநௌ) இன்னபிற சாதனங்கள் இல்லாமல் மேடையில் தாளம் தட்டி வெறும் தோற்கருவிகள், துளைக்கருவிகள், தந்திக்கருவிகளை மட்டும் வைத்துக்கொண்டு இசையமைப்பது என்பது இயலாத செயலாகும்.
தமிழ் இசையில் உலக இசையின் தாக்கம் ஏற்பட்டதன் நோக்கமும் காரணமும்
மனித மனம் புதுமைக்கு என்று அடிமையாவது இயல்பு. அதோடு அந்தப்புதுமை அதீதமான விளம்பரங்களோடு வெளிப்படுத்தப்பெற்றால் புதுமையின் வளர்ச்சியை அளவிட முடியாது. அதுபோலதான் புதுமையின் காரணமாகத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒலிப்பதிவு என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக அதனை கொண்டு தொழில் நடத்தி இலாபம் சம்பாதிக்கும் கம்பெனிகள் உருவானது இன்றியமையாக் காரணமாகும். இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும் என்ற உண்மையை அறிந்தவர்கள் புதிய வியூகங்களை வகுத்தார்கள். இலண்டனில் மதுவிடுதி ஒன்றில் 1987-ஆம் ஆண்டு 23 பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இவர்கள் இசைவாணர்கள் அல்ல. முன்னனி ஒலி நாடகக் கம்பெனியாளர்கள், வளர்ந்து வரும் இசைச் சந்தையை விரிவுபடுத்துவது எப்படி என்று விவாதித்தனர். மேலும் ஒலிநாடாக்களை எப்படி வகைப்படுத்துவது என்றும் விவாதிக்கப்பெற்று இசைக்கலைஞர்கள் அல்லாத இசை வியாபாரிகள் சேர்ந்த உலக இசை (றுழசடன அரளiஉ) என்ற சொல்லினை உருவாக்கினார்கள்.
இந்த வகைப்பாடு இன்று உலகில் உள்ள அனைத்து இசைவாணர்கள் விமர்சகர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் அனைவராலும் பின்பற்றப்பெற்று வருகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் 1980-களுக்குப் பின் முதலாலியம், கலைகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், உறவுகள், அந்தரங்கங்கள், அதிசயங்கள் போன்ற அனைத்தினையும் பண்டமாக்கி விற்கத் தலைப்பட்டதன் விளைவே கலப்பிசை தோன்றியதற்கான காரணமாகும். இசை என்னும் கலையைச் சந்தைக்குக் கொண்டு வரவேண்டுமென்றால், பாரம்பரிய நாட்டார் கலைஞர்களைக் கண்டறிந்து ஒலிப்பதிவு செய்து ஒலி நாடாக்களாக ஒலிப்பேழைகளாக உருவாக்க வேண்டியது இன்றியமையாதது. மேலும் அவற்றினை விளம்பரப்படுத்துவது விற்பனை செய்வது ஆகியன தேவை. இப்பணியை இந்நிறுவனங்கள் செய்தன.
ஓர் இசையைப் பதிவு செய்கிற போது தொழில் நுட்பம் சார்ந்த தேவை என்பது இன்றியமையாதது. அதோடு பதிவு செய்யப்பெற்ற இசை கேட்கப்படுதல், நேர்த்தி போன்ற செயல்களில் கவனம் தேவைப்படுகிறது. இவற்றினை மையமாகக் கொண்டு சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய இசைகள் தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. அவற்றுள் துடீடுஇ யுமுபுஇ முசுமுஇ ஊடீஐஇ ளுமுடீஇ ளுழலெஇ லுயஅயாயஇ முழசபஇ னுநழெnஇ ளுவநiடிநசபஇ குழளவநஒஇ வுயளஉயn ஆகிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா நாடுகளைச் சார்ந்த முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கின. இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குகின்ற போது அவற்றின் தேவையை மக்களிடம் குறிப்பாகக் கலைஞர்களிடம் கலப்பிசை கொண்டு சென்றது.
1980-க்குப் பிறகு செயற்கைக்கோள் அலைவரிசை, தொலைக்காட்சி சாதனங்கள், ஹாலிவுட் படங்கள் போன்றவை தமிழகத்தினை முற்றுகை இட்டன. ஆங்கிலப் படங்களின் நேரடி மொழிமாற்றம், ஒரு புதிய வகை இரசனையை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. புதுமையான கதையமைப்புகள், ஒப்பனைகள், ஒலி-ஒளி ஆகியவற்றில் இருக்கும் துல்லியத்தன்மை போன்றன மக்களை ஈர்த்ததுடன் மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பெற்றன. ஆர்வமூட்டும் சமகாலப்பிரச்சனை, போர், கலவரம், வன்முறை, புதிய காட்சிகள், பிரிவு, இழப்பு, காதல், இறப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய திரைப்படங்கள் பெருகின. இதனைக் கண்ட பார்வையாளர்கள் இத்தகைய படங்களையும், இசைக்கலையையும் வரவேற்றனர். கிழக்கிந்திய கம்பெனியார் எவ்வாறு வாணிபப் பொருட்டு இந்தியாவிற்குள் புகுந்தார்களே அதுபோல மேற்கிந்திய இசையானது வணிபத்தினை, வியாபாரச் சந்தையை மையமாகக் கொண்டே தமிழகத்தில் நுழைந்து இன்றளவும் நிலைத்து வருகின்றது.
ஊலக நாடுகளில் தமிழர் இசை
இந்தியர்கள் இசைக்கலையுடன் பூர்வீக எகிப்திய இசைக்கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலிருந்த யாழ் வகைகளைப் போலவே எகிப்து நாட்டிலும் நரம்பு வேறுபாடு உடைய யாழ்கள் இருந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் யாழ் வருணிக்கப்பட்டு இருப்பது போல எகிப்திய யாழ்களும், அழகிய வடிவம் உடையனவாக அமைக்கப்பட்டு சிவப்புத் தோல் உறையால் போர்த்தப்பெற்றிருந்தன. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் “தீப்ஸ்” (வுhநடிநள) என்ற எகிப்திய நகரத்தில் இருந்த மகான்களின் கல்லறைகளில் யாழ் போன்ற இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பெற்றன. இவ்விசைக் கருவிகள் பெரும்பாலும் ஏழு நரம்புகளை உடையனவாக இருந்தன. 21 நரம்புகளை உடைய ஓர் எகிப்திய யாழ் பிரான்ஸ் (குசயnஉந) தேசத்துத் தலைநகரான “பாரீஸ்” (Pயசளை) நகரில் உள்ள பொருட்காட்சியில் வைக்கப்பெற்றுள்ளது.
தீப்ஸ் மன்னர்களின் கல்லறைகளின் சுவர்களில் ஆண்களும் பெண்களும் யாழை மீட்டி வாசிக்கும் பாவணையால் தீட்டம்பெற்ற பல படங்கள் காணப்பெறுகின்றன. யாழ் வாசிக்கும் ஒருவன் சிகப்புக் கறையுடைய ஓர் ஆடையை உடுத்தியிருப்பதாகப் படம் வரையப்பெற்றுள்ளது. அப்படி வண்ணம் தேய்க்கும் கலை தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் தான் இருந்தது என்பது வரலாற்று உண்மை.
மேற்கூறிய படங்களில் யாழைத் தவிர முழவு, குழல், கஞ்சதாளம் முதலிய இசைக்கருவிகளும் வரையப்பெற்றுள்ளன. கம்போடியா, சம்பா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜாவா, பர்மா, இந்தோனேசியா, ஆஸ்திரியா, கிழக்கு ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு அங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
ஐரோப்பா தன்னுடைய இசையின் அடித்தளத்திற்கு இந்தியாவிற்குக் கடமைப்பட்டுள்ளது ச ரி க ம ப த நி என்ற ஸ்வரப் பெயர்கள், நம் நாட்டு இசைக்குறியீடுகள் ஆகியவை பெர்ஷியா (Pநசளயை) அரேபியா (யுசயடியை) வழியாக ஐரோப்பாவிற்குச் சென்று பதினொன்றாவது நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த குய்டோடி-அரெஜ்ஜோ என்பவரால் அங்கு புகுத்தப்பெற்றது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் தமிழர் இசையினுடைய எச்சம் இன்றளவும் இருந்து வருகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக